பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2014

தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை கட்சியிலிருந்து ஸ்டாலின் நீக்கிவிடுவார்: ரித்தீஷ்

 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை தி.மு.க.வில் இருந்து ஸ்டாலின் நீக்கி விடுவார் என்று அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க எம்.பி. ரித்தீஷ் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷ் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரித்தீஷ், "தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை. என்னை வெளியேற்றி விட்டார்கள். கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க இல்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க இருக்கிறது. 


நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின், கருணாநிதியை கட்சியை விட்டு நீக்கி விடுவார். ஸ்டாலின் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே கட்சி பொறுப்புகளில் நியமித்து மற்றவர்களை புறக்கணிக்கிறார். விரைவில் புறக்கணிக்கப்பட்டவர்களும் அம்மாவை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்வார்கள்" என்றார்.