பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2014


பிள்ளைகளை நில்வள கங்கையில் வீசிய தந்தை சடலமாக மீட்பு
மாத்தறை பிரதேசத்தில்  நில்வள கங்கையில் நேற்று தனது இரு பிள்ளைகளை வீசிய தந்தையின் சடலத்தை மில்லால கங்கையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
நேற்றைய தினம் தனது இரு பிள்ளைகளையும் கங்கையில் வீசுவதற்கு முன்னர் உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கங்கையில் வீசப்பட்ட குழந்தைகள் பொலிஸாருக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.