பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2014

புதுவையில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், புதுவை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக
மாம்பழம் சின்னத்தில் போட்டி யிடும் ஆர்.கே.ஆர்.அனந்தராமனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கிறது.


பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றிக்கு முழு முனைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தேர்தல் பணியாற்றுமாறு புதுவை மாநில மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளையும் கழக கண்மணிகளையும் அன்புடன் வேண்டுகிறேன்’’என்று கூறியுள்ளார்