பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2014





திருக்கோவிலூர் முதியவரான அப்பாதாஸோ ""என்ன சார் ஆட்சி இது? பால் விலை தாளலை. போற போக்கைப் பார்த்தா அரிசி. பருப்பு , காய்கறியைக் கண்லயே பாக்க முடியாது போலிருக்கு. இந்தம்மா இப்படியா விலைவாசிய ஏறவிடுறது?
முதல்ல 5 ரூபாய்க்கு பால் வாங்கினா ரெண்டு வேளைக்கு நாங்க டீ போட்டுக் குடிப்போம். இப்ப ஒரு டீ ஏழுரூபா எட்டு ரூபாயாம்'' என்றார் வேதனை ததும்பும் குரலில்.

முகையூரில் வழிமறித்த ஜனங்கள் ""எங்களுக்குக் குடிக்க தண்ணியில்லை. விவசாயத்துக்கும் வழி இல்லை. தென்னை மரத்தை    யெல்லாம் பாருங்க பட்டுப்போய் நிக்கிது. விவசாய வேலை கூட கிடைக்க மாட்டேங்குது. ஆனா இந்தம்மா கிரைண்டர், மிக்ஸி கொடுக்கறோம்ன்னு சொல்றாங்க. கிரைண்டர்ல எதைப் போட்டு அரைக்கிறது?''’என்று ஆதங்கப்பட்டனர். 


கிளியனூரில் காய்கறி விற்றுக்கொண்டிருந்த அங்கம்மாள் ""என் ஓட்டு சூரியனுக்குதான்''’ என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பக்கத்துக் கடைக்காரர் ""ஏம்மா வெளியூர்ல இருந்து வந்து கடை போடற நீ, சூரியனுக்குத்தான் போடுவியா? இனி நீ கடை போடணுமா, வேண்டாமா?''’என்றார் மிரட்டலாய். அங்கம்மாளோ ""யாருக்கு ஓட்டுப் போடணும்கிறது அவங்கவங்க உரிமை. உங்க மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். கலைஞரை எனக்குப் பிடிச்சிருக்கு, போடறேன்'' என்றார் அழுத்தமாய்.

அரகண்டநல்லூர் இளநீர் வியாபாரியான முருகேசன் ""எந்த அரசியல் கட்சியைப் பார்த்தாலும் எனக்கு வெறுப்பா இருக்கு. ஏன்னா, என் மனைவி ரெண்டு வருசத்துக்கு முன்ன உடம்பு முடியாம ஆயிட்டா. அவளை 40 கி.மீ. தூரமுள்ள விழுப்புரத்துக்கு அவசரமா கூட்டிக்கிட்டுப்  போனேன். அப்ப ஒரு அரசியல் கட்சி பந்த் நடத்துச்சு. அப்ப மரத்தையெல்லாம் வெட்டிப்போட்டு சாலையை மறிச்சிட்டாங்க. அதனால் வழியிலேயே என் மனவியைப் பறிகொடுத்துட்டேன். என்னால எப்படி ஓட்டுப் போடமுடியும்?''’என்றார் ஈர விழிகளோடு.

-எஸ்.பி.சேகர்& சர்வே டீம்