பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2014


புதுச்சேரியில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு
பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ம.க.வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் என்.ஆர்.காங்கிரசுக்கே ஆதரவு என புதுவை மாநில பாரதீய
ஜனதா கட்சி அறிவித்துள்ளது.


இந்தநிலையில் பா.ம.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது.
இதுகுறித்து ம.தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் ஹேமா.பாண்டுரங்கம்,
’’புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவு அளிக்கும்படி எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எங்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதன்படி நாங்கள் தேர்தல் பணிக்குழு அமைக்க உள்ளோம். பா.ம.க.வுடன் கலந்துபேசி தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்’’என்று கூறினார்.