பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2014


காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய சிங்கள இளைஞர் கைதாகி விசாரணை 
பேஸ்புக் வலைத்தளம் ஊடாக அறிமுகமான யுவதியுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு, அந்த யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பதியேற்றியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கலேவல பொலிஸார் தெரிவித்தனர்.
பேஸ்புக் மூலம் அறிமுகமான கலேவல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியும் இளைஞரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இருவருக்கும் இடையிலான காதல் தொடர்பு முறிந்துள்ளது.
இதனால் கோபமடைந்த இளைஞர் முன்னர் எடுக்கப்பட்ட யுவதியின் நிர்வாண புகைப்படத்தை போலியான பேஸ்புக் கணக்கின் மூலம் பதிவேற்றியுள்ளார்.
அண்மையில் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு யுவதிகளை மிரட்டிய அந்த இளைஞர், மீண்டும் காதல் தொடர்பை ஏற்படுத்தவில்லை என்றால் புகைப்படத்தை மீண்டும் பதிவேற்ற போவதாக எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட யுவதி கலேவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.