பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2014

 

அ தி மு க நடிகை ஆர்த்தியின் கணவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

காமெடி நடிகை ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்
.

இந்த நிலையில் ஆர்த்தியின் கணவரும் நடிகருமான கணேஷ் வெள்ளிக்கிழமை பா.ஜனதா அலுவலகத்துக்கு வந்தார். மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு பா.ஜனதா உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய சூழ்நிலையில் நரேந்திரமோடி தான் பிரதமராக வேண்டும் அவரால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்றார்.
உங்கள் மனைவி ஒரு கட்சியிலும், நீங்கள் ஒரு கட்சியிலும் இருப்பது முரண்பாடாக தெரியவில்லையா என்ற கேள்விக்கு,
எனது மனைவி வேறு கட்சியில் இருப்பது உண்மை தான். என்னை பொறுத்தவரை மோடி பிரதமராக வேண்டும். அதற்காக பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றார்.