பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2014


சென்னையில் நாளை வைகோ பிரச்சாரம்

பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை (வெள்ளி) சென்னையில் பிரசாரம் செய்கிறார்.



வடசென்னையில் தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து பேசுகிறார். மத்திய சென்னையில் சூளைமேடு காந்தி சிலை அருகில் தே.மு.தி.க. வேட்பாளர் ரவீந்திரனுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
மாலையில் தென் சென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து தேனாம்பேட்டை, திருவள்ளூவர் சாலை, சைதாப்பேட்டை, ஐந்து விளக்கு, தியாகராயநகர், பிருந்தாவன் சாலை ஆகிய இடங்களில் பேசுகிறார். இரவு விருகம்பாக்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் இன்று மாலையில் வடசென்னை தொகுதி ஆர்.கே.நகர் பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து தெருமுனை பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.