பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2014

வவுனியா வைத்தியசாலையில் முக மறுசிரமைப்பு சத்திர சிகிச்சை 
news
முக சீரமைப்பு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் அதனை வவுனியா வைத்தியசாலையில் பெறமுடியும் என வவுனியா பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் மல்லவராட்சி தெரிவித்தார்.
 
வட பகுதியில் உள்ள முக சீரமைப்பு மற்றும் உதடு அண்ணப்பிளவு தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் இது வரை காலமும் அனுராதபுரம் அல்லது தென் பகுதி வைத்தியசாலைகளுக்கு சென்றே சிகிச்சைகளை பெற்று வந்தனர்.
 
இதன் காரணமாக பொது மக்கள் மொழி பிரச்சனைகள் மற்றும் நேரம் மற்றும் பண பிரச்சனைகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.
 
இந்த நிலையில் வட பகுதி மக்களுக்கு அண்ணபிளவு உதடு மற்றும் முகசீரமைப்பு சத்திர சிகிச்சையை இலகுவாக வழங்க வேண்டிய தேவையின் பொருட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் இச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக வட பகுதியில் இத் தாக்கத்திற்கு உளளானவர்கள் இலகுவாக தமக்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் னவும் வைத்தியகலாநிதி மல்லவராட்சி கூறினார்.
 
அதவேளை இச் சிகிச்சைகளை பெற விரும்புபவர்கள் குறிப்பிட்ட வயதிற்குள் இச் சிகிச்சைகளை பெற வேண்டியவர்காளக உள்ளமையினால் இவ்வாறான குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக