பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2014


குராம் ஷேக்கின் கொலைச் சந்தேக நபர்களுக்கு பிணை: அதிர்ச்சியில் குடும்பம
பிரித்தானிய செஞ்சிலுவை சங்க பணியாளரான குராம் ஷேக்கின் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அவரது குடும்ப உறவினர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள குராம் ஷேக்கின் சகோதரர் நசீர் ஷேக் இதனைத் தெரிவித்துள்ளார்.
குராம் ஷேக்கின் வழக்கு விசாரணைக்காக இலங்கை வந்திருந்த அவரும், அவரது தாயாரும் வழக்கு சில வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நான்கு பேருக்கு பிணை வழங்கியமை தங்களுக்கு அதிர்ச்சியளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.