பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2014

காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்து சமிக்ஞை
காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவருகின்ற சீனக் கப்பல் ஒன்று கடலுக்கடியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை ஒன்றைக் கேட்டுள்ளது. ஆனால் இது ஆர்370 விமானத்தின் பிளாக் பாக்ஸில் இருந்து வருகின்ற சமிக்ஞையா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
கறுப்பு பெட்டியை தேடும் உபகரணம் பொருத்தப்பட்ட கப்பலானது விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போன்றவற்றை கேட்டிருந்தாலும் அதனை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 
குறைவான நேரத்துக்கு மட்டுமே இந்த சமிஞ்சை கேட்டதாகவும், இந்த சமிக்ஞை காணாமல் போன விமானத்தோடு தொடர்புடையதா என்பதும் தெரியவில்லை.
 
தேடுதலை ஒருங்கிணைத்து நடத்தி வரும் ஆஸ்திரேலியாவும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை