பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2014

 
 
பூனகரி பிரதேசத்தில் சீனப் பிரஜை இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது குறித்த பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சீனப் பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலி நகைகளை குறித்த நபர்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.