பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2014

நடிகை அனார்கலிக்கு போனஸ் ஆசனம்!

பிரபல நடிக்கை அனார்கலி ஆகர்சாவிற்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அனார்கலி, தென் மாகாணசபையின் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டார்.
அனார்கலி ஆகர்சா சுமார் 8842 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

தென் மாகாணசபை விருப்பு வாக்கு பட்டியலில் அனார்கலி பதினெட்டாம் இடத்தைப் பிடித்தார்.
எனினும், போதியளவு விருப்பு வாக்குகளை திரட்ட முடியாத காரணத்தினால் உறுப்புரிமையை இழக்க நேரிட்டது.
உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அனார்கலிக்கு போனஸ் ஆசனமொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வமாக இன்னமும் போனஸ் ஆசனம் பற்றி அறிவிக்கப்படவில்லை.