பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2014

டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல்
டெக்சாஸ் ஓபன் ஸ்கு வாஷ் போட்டியின் காலிறு தியில் கயானாவின் நிக்கோ 
லெட் ஃபெர்னாண்டஸை வீழ்த்தி 

அரையிறுதிக்கு முன் னேறினார் சென்னையைச் சேர்ந்த தீபிகா பல்லிகல்.
அமெரிக்காவின் ஹூஸ் டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலி றுதிச் சுற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் தரவரிசையில் 12ஆவது இடத் தில் உள்ள தீபிகா நீண்ட போராட்டத்துக்குப் பின் 11-4, 11-6, 10-12, 10-12, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் அவர், அயர் லாந்து வீராங்கனை மேட் லின் பெர்ரியை சந்திக்கிறார்.
வெற்றிக்குப் பின் தீபிகா கூறுகையில், இந்த சுற்று கொஞ்சம் கடினமாக இருந் தது. மூன்றாவது செட்டில் நிக்கோலெட் கடின போராட் டத்துக்குப் பின் அந்த செட் டைக் கைப்பற்றினார்.
இறு தியில் என் திட்டம் சரியாக நிறைவேறி வெற்றி பெற்ற தில் மகிழ்ச்சி. மேட்லினுக்கு எதிராக ஆடுவது எப்போதும் சவால் அளிக்கும். இதற்கு முன் அவரை வீழ்த்தியுள் ளேன் என்றாலும் அவர் சிறந்த ஃபார்மில் இருப்ப தால் அடுத்த ஆட்டம் கடின மானதாக இருக்கும் என்றார்.