பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2014


ஆஸ்திரேலிய விமானம் கடத்தப்பட்டதாக தகவல்! விமான நிறுவனம் மறுப்பு!
ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தோனேசியாவி்ன் பாலி நகரில் இறங்கிய போது கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பாலியில் விமானம் தரையிறங்கியதும், விமானிகள் அறைக்குள் சில பயணிகள் செல்ல முயற்சி செய்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தை தீவிரவாதிகள் கடத்த  திட்டமிட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

இந்நிலையில், விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, பயணிகளில் ஒருவர், விமானிகள் அறைக்குள் நுழைந்ததாகவும் விமானத்தை பாலியில் தரையிறக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும்,அதன் பேரில் விமானம் அங்கு தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாலி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது;
விமானத்தை யாரும் கடத்த வில்லை என்றும், விமானிகள் அறைக்குள் நுழைந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்/ அவர் குடிபோதையில் விமானி அறைக்குள் சென்றுள்ளார் எனவும், பாலி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.