பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2014

இறுதிப் போட்டிக்கு இலங்கை.கடந்த முறை இறுதியாட்டத்தில் தோற்ற இலங்கை இந்த முறை மே  இ தீவுகளுக்கு பழி  தீர்த்தது 
ரி - 20 உலக கிண்ண சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
 
நாணய சுழற்யில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மாணித்து 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களை பெற்றது.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களத்தில் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களைப் பெற்றது. இதில் 2 விக்கெட்டுக்களை லசித் மலிங்க மற்றும் பிரசன்ன, குலசேகர தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக் கொண்டனர்.
 
இந்த நிலையில் மழை குறுக்கிட்டதனால் போட்டி இடை நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டு 'டக்வேத் லூயிஸ்" முறையில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று ரி - 20 உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.