பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2014

சொலமன் தீவுகளில் நிலஅதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை 
 சொலமன் தீவுகளில் உணரப்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
சொலமன் தீவுகளில் இன்று அதிகாலை 8.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதை அடுத்து சொலமன் தீவுகள் பப்புவா நியூகினியா மற்றும் நியூ கெலடோனியா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
 
எவ்வாறாயினும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை
 
கடந்த வாரமும் சொலமன் தீவுகளி்ல் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 16 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.