பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014

வெளிநாடுகளுக்கான தூதர்கள் நியமனம் 
 இந்தியா, அமெரிக்க, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதர்களை நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

 
 இதன்படி இந்தியாவுக்கு பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்னவும், இந்தியாவுக்கான இலங்கை தூதராக இருந்த பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான தூதராகவும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஜேர்மன் நாட்டுக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.