பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2014

மோடியை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல்
வதோராவில் தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (58), சாதனைக்காக லோக்சபா
தேர்தலில் துவங்கி, கூட்டுறவு சங்க தேர்தல் வரை அனைத்திலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கம்.

தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பீகார் உள்பட பல்வேறு மாநில லோக்சபா சட்டசபை தேர்தல் மற்றும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, இதுவரை, 157 முறை வேட்பு மனுதாக்கல் செய்தார். 158வது முறையாக, இரு நாட்களுக்கு முன், தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 
இந்நிலையில், பா.ஜ.க., பிரதம வேட்பாளர் மோடி போட்டியிடும், வதோரா லோக்சபா தொகுதியில் போட்டியிட  பத்மராஜன், 159வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.