பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014

வடமராட்சியினில் குடும்பஸ்தர் கடத்தல்! ரி.ஜ.டியே பிடித்ததென்கிறது பொலிஸ்

வடமராட்சி கரவெட்டி கிழக்கு பகுதியினைச்சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு கடத்தப்பட்டவர் ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) என
அடையாளங்காணப்பட்டுள்ளார்.எனினும் பயங்கரவாதக்குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.




வீட்டிற்கு நேற்றிரவு வந்த நபர்கள் பலாத்காரமாக கைகள் மற்றும் கால்களை கட்டியே வாகனமொன்றினில் அவரை கொண்டுசென்றுள்ளனர்.எனினும் அவர்; தற்போது யாழிலுள்ள ரி.ஐ.டி.யினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.