பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2014


பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி

கரூரில் இருந்து ஜெயலலிதாவைப் பார்த்து கேட்க விரும்புகிறேன்.  கருணாநிதியை விவாதிக்க கேட்கிறிர்களே நான் உங்களை பார்த்து கேட்கிறேன். ஒரு பொது மேடை அமையுங்கள். நான் வருகிறேன். நீங்கள் அமைக்காவிடில்
நான் அமைக்கிறேன். விவாதிக்க ஜெயலலிதா தயாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் திமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 2001-2006ல் ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது அரசு ஊழியர்களை மிரட்ட எஸ்மா, டெஸ்மா சட்டம் கொண்டு வரப்பட்டது
அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு முன்பே அந்த எஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி ஒரே நாளில் ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை: ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 24 பேர்.
ஜெயலலிதா ஆட்சியில் பொய் வழக்குப் போட்டு நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 2211 பேர்.
இதனால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர்கள் எண்ணிக்கை  50க்கும் மேற்பட்டோர்.
அதுமட்டுமா? மக்கள் நலப்பணியாளர்கள் 13000 பேர் வேலையிலிருந்து துரத்தப்பட்டார்களே அதற்கு யார் காரணம் ? அவர்களில் 50 -60 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதற்கு யார் காரணம் ?  1996ல் திமுக ஆட்சி வந்ததும் மக்கள் நலப்பணியாளர்களை பணியமர்தினோம். 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் துரத்தப்பட்டார்கள்.
2006ல் மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் அவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். 2011ல் அதிமுக ஆட்சி வந்ததும் மீண்டும் துரத்தப்பட்டார்கள். உடனே அவர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று நியாயம் கேட்டார்கள். அவர்களுக்கு நியாமும் கிடைத்தது. நீதிமன்றங்கள் அவர்களை மீண்டும் பணியமர்த்த உத்திரவிட்டும், இந்த ஆட்சி ஏதாவது நடவடிக்கை எடுத்ததா ? அவர்கள் பிச்சை எடுத்தும், மொட்டை அடித்தும் பலவித போராட்டங்கள் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஏதாவது நடந்ததா?
மின்சாரம் பற்றி கேட்டால், மின்சாரம் பற்றி நீங்கள் கவலை படாதீர்கள். நான் தான் முதல்வர். என் நேரடி பார்வையில் இதனை கவனித்து கொண்டு இருக்கிறேன். விரைவில் சரியாகிவிடும். இதை அவர் எப்போது சொன்னார் என்றால் ஏப்ரல்-1 ம் தேதியன்று. அது முட்டாள்கள் தினம். மக்களை முட்டாள்களாக்க அப்படி சொல்கிறார்.
இரண்டு நாட்கள் கழித்து இதே கரூரில் நடந்த பொது கூட்டத்தில் என்ன சொன்னார் என்றால், மின்சாரத் துறையில் ஏதோ சதி நடக்கிறது என்கிறார். “ நான் தான் முதல்வர், நானே சரி செய்வேன்” என்றவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் இதனை” சதி” என்கிறார்.
நான் கேட்கிறேன். காவல்துறை, உளவுத்துறை இரண்டும் இவருக்கு கீழே தானே உள்ளது. பிறகு இதைச் சொல்ல முதல்வர் பதவி வகிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு தகுதி உள்ளதா ?
ஆக இப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதா மக்களை பார்த்து செய்வீர்களா? செய்வீர்களா? என கேட்கிறார். நீங்கள் அவரை பார்த்து கேளூங்கள். எதையாவது செஞ்சு தொலைச்சீங்களா? என்று பேசினார் ஸ்டாலின்.