பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2014

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பார்த்திபன் போட்டியிடுகிறார். அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்கின்றனர் என்று திமுக வேட்பாளர்
பொன்.முத்துராம-ங்கம் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் சென்றது.

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு உள்ளது. அங்கு சனிக்கிழமை காலை ஏராளமான அதிமுகவினர் கூடியிருந்தனர். பண்ணை வீட்டில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் பரவியதன் அடிப்படையில், மதியம் 12 மணிக்கு போலீசார் பண்ணை வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
வீடுகளின் முன்பு நின்றிருந்த அதிமுகவினரின் கார்களையும் சோதனை செய்தனர். சுமார் ஒருமணி நேரதிற்கு பிறகு தேர்தல் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையின் போது அமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டில் இல்லை. இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.