பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014


பார்முலா–1’ கார் பந்தய முன்னாள் சாம்பியன் மரணம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பார்முலா–1 கார் பந்தய சாம்பியனான ஜாக் பாப்ஹம் நேற்று தனது வீட்டில் மரணம் அடைந்தார். 88 வயதான பாப்ஹம் 1959, 1960, 1966 ஆகிய ஆண்டுகளில் பார்முலா–1 
சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.


126 கிராண்ட்பிரீ பந்தயங்களில் பங்கேற்று இருக்கும் பாப்ஹம் 14 பந்தயங்களில் முதலிடம் பிடித்துள்ளார். பாப்ஹம்மின் மகன்கள் ஜெப், கேரி, டேவிட் ஆகியோரும் கார் பந்தயங்களில் பங்கேற்று இருக்கிறார்கள். தனது சொந்த பெயரில் கார் பந்தய அணியை நடத்தி சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே வீரர் பாப்ஹம் என்பது குறிப்பிடத்தக்கது.