பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014


திரையரங்கில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த மாணவியை வல்லுறவு
கேகாலை பிரதேசத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை திரையரங்க முகாமையாளர் பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பியுடன் இம் மாணவி திரையரங்கிற்கு சென்றுள்ளார். நண்பி தனது காதலனுடன் திரையரங்கின் மேல் மாடி பெல்கனியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது இம்மாணவி தனியாக கீழ்ப்பகுதியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

மாணவி தனியாக இருந்ததைக் கண்ட முகாமையாளர் திரையரங்க ஊழியரை அனுப்பி மாணவியை அழைத்து வரும்படி கூறியதாகக் கூறி, மாணவியை ஏமாற்றி வரவழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்கும் படி கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.