பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014

கொக்குவிலில் சிறுவனைக் காணோம் 
 கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஆறுமுகம் சுதர்சன்(வயது 14) என்ற சிறுவனை காணவில்லை என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
குறித்த சிறுவன் நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பாததை அடுத்து பெற்றோர்களினால்  இன்று காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.