பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014

கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல் 15 பேர் பலி 
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில்  இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகியுள்ளதாக அன்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் கால்பந்து மைதானத்தில் திடீரென அதிக சன நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 15 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைதானத்தில் இடம்பெற்ற போட்டியொன்று தொடர்பில் போட்டியாளர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பார்வையாளர்களிடையே குழப்ப நிலை தோன்றியதை அடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகையை பிரயோகித்துள்ளனர்.