பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2014

'1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!''?
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவியதால், ஜெயிப்போமா... மாட்டோமா என்ற குழப்பத்தில் பல வேட்பாளர்களும் ஆழ்ந்திருக்க... காஞ்சிபுரம்
அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பேனர்கள், மக்களை கிறுகிறுக்க வைத்திருக்கின்றன. இப்படி ஒரு பேனரை வைத்து தேர்தல் கமிஷனுக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் காஞ்சிபுரம் நகரமன்ற உறுப்பினர் பரிமளம்.   கடந்த 28-ம் தேதி மாலை 3.00 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் 10-க்கு 20 என்ற அளவில் நான்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 'வடக்கே எதிர்நோக்கும் நாளைய பிரதமர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழகத் தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் அவர்களை வெற்றிபெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி’ - அந்த பேனர்களில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் இவைதான். திடீரென்று முளைத்த அந்த பேனரை மக்கள்  ஆச்சரியத்தோடு புருவம் உயர்த்தி பார்த்துவிட்டுச் சென்றனர்.