பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014


ஜனாதிபதி தேர்தல் குறித்து நவம்பர் மாதம் 19ம் திகதி அறிவிப்பு! ஜனவரியில் தேர்தல்!- சிங்கள ஊடகம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
இதன்படி எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி அல்லது அதற்கு நெருங்கிய நாளொன்றில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2016ம் ஆண்டு வரையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையிலும், குறித்த சிங்கள பத்திரிகை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என உறுதியாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் ஜனாதிபதி இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
அதன் பின்னர் தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி தேர்தல் நடாத்த அரசியல் சாசனத்தில் சந்தர்ப்பம் உண்டு.
எனவே, ஜனாதிபதி தேர்தலை முதலில் நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு நடத்தப்படவிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடான சந்திப்பினை ஜனாதிபதி இறுதி நேரத்தில் ரத்து செய்துள்ளார்.
இந்த சந்திப்பு பிரிதொரு நாளில் நடைபெறும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு நடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.