பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2014


பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு
முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் ஆசிரியர்களை கொண்டு நடைபெற்றது.

தற்போது தேர்வு முடிவு தயாராக உள்ளது. முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில், இயக்குனர் கு.தேவராஜனால் வெளியிடப்பட உள்ளது.

+2 தேர்வு முடிவுகள் www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in,www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளன. 
ஸ்மார்ட் போன் மூலம் www.dge1.tn.nic.in என்ற இணையதளத்திலும் முடிவுகளை காணலாம். 
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம். TNBOARD<space><Registration No>, DOB in DD/MM/YYY> என டைப் செய்த விவரங்களை 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.