பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014



2ஜி வழக்கு:  இன்றுடன் வாக்குமூலம் பெறுவது முடிகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.



ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்து விட்டனர். இன்று ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் அதிகாரிகள் கவுதம் ஜோஷி, நித்தின்அகர்வால் வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து இன்றுடன் வாக்குமூலம் பெறுவது முடிவுக்கு வருகிறது.
சாகித்பல்வா மீது கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ. நீதிபதி சைனி கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான உத்தரவை இன்று மதியம் அவர் வழங்க உள்ளார்.