பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014

நைஜீரியாவில் சிறுமிகளை மீட்க புறப்படும் அமெரிக்கா
நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் அதிகமான சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் விசேட குழு ஆரம்பிக்கவுள்ளதாக
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.

நைஜீரிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ள இந்த குழு, கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்பதற்கான தம்மால் கூடுமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி குறித்த சிறுமிகள் போகோ ஹராம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.

எனினும் அவர்களை மீட்க போதுமான செயற்பாடுகளை நைஜீரிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.