பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2014

ஐதேகவினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை 
சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக, ஐதேகவினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா
என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரும் 20ம் நாள் முடிவு செய்யவுள்ளது. 

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, 

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து முடிவு எதையும் எடுக்கவில்லை. 

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதா நடுநிலை வகிப்பதா என்று வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கூட்டம் கூடுவதற்கு முன்னர், காலை 11 மணிக்கு நடக்கவுள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.