பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2014



தொழில்நுட்ப காரணங்களால் "கோச்சடையான்' படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் "கோச்சடையான்'.
ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட
"மோஷன் கேப்சர்' என்ற தொழில்நுட்பத்தில் முப்பரிமாண வடிவமைப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், ஆதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தப்படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து படத்தை தயாரித்துள்ள ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், மீடியா ஒன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகியவை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 3 டி முப்பரிமாண தொழில்நுட்பம் இல்லாமல் 2 டி தொழில்நுட்பத்திலும் கோச்சடையான் படம் வெளியாக உள்ளது. அதற்காக சுமார் 6 ஆயிரம் பிரிண்ட்டுகள் தேவைப்படுகின்றன. தொழில்நுட்ப வசதிக்கேற்ப கால அவகாசம் தேவைப்படுவதால் திட்டமிட்டபடி மே 9-ஆம் தேதி படத்தை வெளியிட முடியவில்லை. மே 23-ஆம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.