பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2014


யேமன் நாடில் தீவிரவாதிகள் 24பேர் பலி 
ஏமனில் அல்–கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை அமைத்து உள்ளனர். அவர்களது முகாம்களை அழிக்க ஏமன் ராணுவத்துக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஷாப்வா மாகாணத்தில் உள்ள புறக்காவல்நிலையம் மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் 20 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஷாப்வா மாகாணத்தின் தெற்கு பகுதியில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 43 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.