பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2014

சுவிஸ் சைவநெறிக்கூடம் நடத்தும் சைவமும் தமிழும் போட்டி நிகழ்வுகள்
 வருடம்தோறும் சுவிஸ் நாடு தழுவிய வகையில் சைவநெறிக்கூடத்தால் மேற்கொள்ளப்படும் சைவமும் தமிழும்போட்டி இம்முறை சீயோன் (24.05.14), பேர்ன் (25.05.14), ஜெனீவா (01.06.14) ஆகிய இடங்களில் வழமை போல் நடைபெறுகிறது. இளந்தமிழ்ச் செல்வங்களுக்கு நால்வர் பெருமக்கள் அருளிய தேவார, திருவாசகப்போட்டியுடன், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போட்டி, சைவத் தமிழ் அருளாளர்களின் வாழ்வுச்சரிதத் திருக்கதைப்போட்டி, இறை திருவுருவங்களிற்கு திருவர்ணம் தீட்டும் போட்டி என்பன நடைபெறுகின்றது. சியோன் போட்டியின் ஒருபகுதிப் படங்கள் இங்கே...