பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014


பஸ்சில் தீ: 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்
கொலம்பியாவில் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவின் வடபகுதியில் உள்ள தேவாலய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
50 குழந்தைகளை ஏற்றிச்சென்ற தேவாலய பஸ்சில் தீ பற்றி எரிந்ததில் 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.

20 குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

38 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் சுமார் 50 குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.