பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2014


ராஜபக்சேவுக்கு விருந்தளிக்கிறார் மோடி
 வரும் 26ம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடி, விழாவிற்கு வருகை தரும் ராஜபக்சே உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின்
தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தானை தவிர மற்ற 7 நாடுகளும் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துவிட்டன.

26ம் தேதி பதவியேற்பு விழா முடிந்தவுடன் வெளிநாட்டு தலைவர்களுக்கு அன்றிரவு விருந்து அளிக்க மோடி முடிவு செய்துள்ளார். வெளிநாட்டுத் தலைவர்களின் டெல்லி வருகையை வெளியுற வுத்துறை உறுதி செய்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு அழைப்புவிடுத்துள்ளது குறித்து இந்திய வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.

நெருங்கிய நட்புநாடு என்ற முறையில் இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதல்வரை அழைத்து வருவது ராஜபக்சேவின் விருப்பத் திற்கு உட்பட்டது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.