பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2014


சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு அபராதம்!


சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை 2வது நாளும் சசிகலா தரப்பினர் துவங்கவில்லை. இதனையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். 



  சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.  இறுதி வாதத்தை தொடங்காததை அடுத்து மூவருக்கும் தலா 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  இறுதி வாதத்தை தொடங்க அவகாசம் கோரிய மனுவையும் பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
திட்டமிட்டு வழக்கை தாமதப்படுத்த மனுவை தாக்கல் செய்வதாக நீதிபதி குன்ஹா கண்டனம் தெரிவித்தார்.    வரும் 26ம் தேதி விசாரணையின் போது நேரில் ஆஜராக 3 பேருக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.   வழக்கின் ஒவ்வொரு விசாரணையின் போதும் 3 பேரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.