பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2014


சி பி ஐ நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி இன்று ஆஜர்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை
திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத் குமார் உள்பட 19 பேரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இன்று திங்கள்கிழமை ஆஜராகவுள்ளனர்.


இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
வழக்கு விசாரணை நடைபெறும்போது தயாளு அம்மாள் ஆஜராக மாட்டார் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவுவரை அவர் சென்னையில் இருந்து புறப்படாததும் இதை உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து, தயாளு அம்மாள் தரப்பு, "சிபிஐ நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் சார்பில் வழக்குரைஞர் ஆஜராவார். வயோதிகம், உடல் நலக் குறைவு காரணமாக அவர் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், அவரிடம் சிபிஐ தொடர்ந்த வழக்கின் வாக்குமூலத்தை சென்னையில் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை மேற்கோள்காட்டி, தயாளு அம்மாள் சார்பில் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய குற்றப்பத்திரிகை நகலை தன்னிடம் அளிக்க வேண்டும் என வழக்குரைஞர் மூலம் கேட்டுக் கொள்ளப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.