பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2014

மட்டக்களப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்தரங்கு - தமிழ் தேசிய கூட்டமைப்பு 
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் 'அனைத்துலக சமூகமும், தமிழ் தேசிய அரசியலும் மற்றும் சமகாலப் பார்வையும்' எனும் தலைப்பில் அரசியல் கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமையில் இந்த நிகழ்வு  இடம்பெறவுள்ளது.
 
இந்த கருத்தரங்கில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் மேற்குறிப்பிட்ட தலைப்பில் விளக்கமளிக்கவுள்ளனர்.
 
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் பூரண விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ள அனைவரையும் வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.