பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2014

தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
தமிழகத்தில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39
தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளை பெற்றார். இதன்மூலம், தமது டெபாசிட் தொகையை அவர் தக்கவைத்தார்.


மற்ற 38 வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். ஒரு வேட்பாளர் தாம் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற வேண்டுமெனில், மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்குக்கு அதிகமான வாக்குகள் பெற வேண்டும். தமிகத்தில் சுமார் 4 புள்ளி 4 சதவீத வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.