பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2014

பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்; பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 
பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் சகல பல்கலைக்கழக பேராசிரியர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதி  தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

 
இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை உயர் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்காவிட்டால்,  தொடர்ந்து  தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
பல்கலைக்கழக மாணவர்கள் மோசமான முறையில் ஒடுக்கப்படுகின்றனர் என்று  விரிவுரையாளர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் அரசு  பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் கூறினார்.
 
தமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை என்று  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.