பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2014

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.

மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.