பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2014

சிரானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 
 முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் கிஹான் பிலபிடிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
சிரானி பண்டாரநாயக்க தொடர்பில் இறுதி தீர்ப்பினை வழங்குவதாக நேற்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
 
இருப்பினும் சிரானியின் வங்கி தகவல்கள் குறித்த அறிக்கை நீதிமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அதனை சமர்ப்பிப்பதற்கு பிரதிவாதிகள் இடையூறு விளைவித்ததாக சிரானி தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி வாதாடினார். 
 
இந்த நிலையில் குறித்த அறிக்கை நீதிமன்றில் ஒப்படைக்கும் வரை வழக்கு மீதான தீர்ப்பை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
 
இதன்படி குறித்த வங்கி தகவல்களை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.