பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2014


சென்னையில் நடைபெற இருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பி.சி.சி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில்  18ம் மற்றும் 22ம் தேதி சென்னை அணி விளையாடும் போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டிகள்
மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் மே 27 மற்றும் 28ம் தேதியில் நடைபெற இருந்த அரையிறுதி போட்டியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. சென்னை மே 18ம் தேதி நடைபெற இருந்த ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. 22ம் தேதி நடைபெற இருந்த ஆட்டத்தில் சென்னை - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
இடமாற்றத்திற்கான காரணம்
சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கேலரிகள் திறப்பு குறித்தான வழக்கு நிலுவைவையில் இருப்பதாகவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.