பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2014

 
முல்லைத்தீவில் முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 விண்ணப்பங்கள்

 
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 வரையான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது.
கடந்த 8ம் திகதி முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் முதற்கட்ட ஆட்சேர்ப்பு நடைபெற்றது.
இராணுவத்தில் பொறியியல், பிளம்பிங், வெல்டிங், மோட்டார் இயந்திரம் திருத்தல், மின்சாரம் ஆகிய துறைகளுக்கு ஆட்சேர்க்கும் பணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் நடைபெற்று வருகின்றன.
இதன் முதற்கட்டத்தில் 50 வரையிலானவர்கள் இராணுவத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தகட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தகுதிபெறுபவர்கள் தெரிவுசெய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று ஒட்டுசுட்டான், புதுமாத்தளன், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இராணுவத்துக்கு தமிழ் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தமது சொந்த இடங்களிலேயே அவர்களது குடும்பங்களுக்கு நெருக்கமான இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.