பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2014


முக்கிய அமைச்சர் ஒருவர் எதிர்கட்சிக்கு தாவி பொது வேட்பாளராக திரை மறைவு பேச்சு வார்த்தை 
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட 6 பொது வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.
ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மாதுளுவாவே சோபித தேரர், ஷிராணி பண்டாரநாயக்க, சி.வீ. விக்னேஸ்வரன் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபல அமைச்சர் ஒருவர் இதில் அடங்குவதாக கூறப்படுகிறது.
பொது வேட்பாளராக போட்டியிட உள்ள அமைச்சர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பதவி ஒன்றை வகித்து வருவதுடன், அவர் தற்போது எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.