பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014

மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற கணவன் மரத்தில் தூங்கி தற்கொலை 
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் கரிதாஸ் வீட்டுத்திட்டம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலைசெய்துள்ளதுடன்  அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
இந்த சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஐ; (வயது -30), அருள்ராஐ; செல்வகுமாரி (வயது - 28)
ஆகியோரே உயிரிழந்துள்ளனர். குறித்த இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குடும்ப தகராறு காரணமாக படுக்கையில் இருந்த மனைவியின் தலையை கணவன் கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர்; வீட்டிற்கு பின் நின்ற மரத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.