பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2014


மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 9 பேர் கைது
மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சுற்றிளைத்த பொலிஸார் 7 யுவதிகள் உட்பட 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை வலான மத்திய மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட யுவதிகளில் 17 வயதான யுவதி ஒருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகளின் சிங்களம் மற்றும் தமிழ் யுவதிகளும் அடங்குகின்றனர். இவர்கள் தெஹிவளை, இரத்மலானை, லுணுகல, மாத்தளை, படால்கும்பு மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினார்.
இவர்களை தவிர விடுதியின் முகாமையாளர் உட்பட இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விபச்சார விடுதி இயங்கிய கட்டிடம் மட்டக்களப்பை சேர்ந்த செல்வந்தர் ஒருவருக்கு சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.