பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2014

தென்னாபிரிக்க தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸூக்கு அமோக வெற்றி
தென்னாபிரிக்காவின் பொதுத்தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை ஈட்டியுள்ளது.
தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 80 சதவீதமானவை எண்ணப்பட்டுள்ளன. இவற்றில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 63 சதவீத வாக்குகளை வென்றுள்ளது. ஜனநாயக கூட்டணி 22 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலுள்ளது.
சமூக ஏற்றத்தாழ்வுகள், வேலைவாய்ப்பின்மை, ஊழல் முதலான பாரிய பிரச்சினைகள் இருந்த போதிலும், தாம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை என வாக்காளர் நிரூபித்துள்ளனர்.
வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றதாகவும், 72 சதவீதத்திற்கு மேலான வாக்காளர்கள் வாக்களித்ததாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜூம்மா கூறுகையில், ”பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில், எங்களது கட்சி  வெற்றி பெற்றிருப்பது, பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.